Saturday 27th of April 2024 10:18:18 PM GMT

LANGUAGE - TAMIL
அமெரிக்கா ஏவுகணை பரிசோதனை ரஷ்யா கடும் அதிருப்தி!

அமெரிக்கா ஏவுகணை பரிசோதனை ரஷ்யா கடும் அதிருப்தி!


மத்திய தூர ஏவுகணை ஒன்றை அமெரிக்கா பரிசோதனை செய்துள்ளது. கலிஃபோர்னியா கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியா கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இத்தகைய சோதனைகளை தடை செய்யும் வகையில், ரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து இம்மாதம் 2-ம் திகதி அமெரிக்கா விலகியது. இதையடுத்து, தற்போது இந்த சோதனையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம்1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.

500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.

தற்போதைய சோதனை பற்றி கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்யா, இராணுவப் பதற்றத்தை அமெரிக்கா அதிகரிப்பதாக கூறியுள்ளது.

மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்த முறிவு புதிய ஆயுதப் போட்டியை தூண்டும் என்று பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள சேன் நிக்கோலஸ் தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை அணு ஆயுதம் ஏந்திச் செல்லக்கூடியது அல்ல என்று அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE